Home நாடு இசா, கைரி, ரபிசி: மீண்டும் சந்தித்த அரசியல் நண்பர்கள்!

இசா, கைரி, ரபிசி: மீண்டும் சந்தித்த அரசியல் நண்பர்கள்!

995
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நூருல் இசா பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியப் பிறகு பலர், அவரது அந்த முடிவினை சீர்தூக்கிப் பார்க்குமாறு கூறிவரும் வேளையில், ஒரு சிலர் கட்சியில் நிலவும் உட்குழப்பங்கள்தான் அவரது விலகலுக்குக் காரணம் என ஆரூடங்களைக் கூறி வருவதையும் இந்த மூன்று நாட்களில் காண முடிந்தது.

ஆயினும், ஓரிருவர் மட்டும் நூருல் இசாவுக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவுக் கூறி ஊக்கமளித்து வருவதைப் பார்க்க முடிந்தது. அவர்களில் இருவர் இரு துருவங்களைச் சேர்ந்தவர் என்பது இன்னொரு சுவாரசியம்.

ஒருவர் அம்னோ கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின். இன்னொருவர்  பி.கே.ஆர்  கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் மற்றும் முன்னாள் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி.

#TamilSchoolmychoice

அவர்கள் இருவரும் நூருலுக்குத் தனிப்பட்ட ஆதரவு அளித்தனர் என்பதோடு அரசியிலிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும் என்று ஊக்கமளித்திருக்கின்றனர்.

இதற்கிடையே, நேற்று, இவர்கள் மூவரும் பங்சாரில் உள்ள ஓர் உணவகத்தில் திரும்பவும் சந்தித்துப் பேசியதாக சமூக ஊடங்களில் உலவும் – அவர்கள் மூவரும் இணைந்திருக்கும் படங்கள் – நமக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.

மூவரும் பங்சாரில் உள்ள அலெக்சிஸ் பிஸ்ட்ரோ எனும் உணவு மையத்தில் சந்தித்துப் பேசியப் படத்தினை ரபிசி ரம்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனை, அடுத்து பலர் பல்வேறான கருத்துகளை முன் வைக்கத் தொடங்கி விட்டனர். ஒரு வேளை இவர்கள் மூவரும் இணைந்து புதிய கட்சியை ஆரம்பிப்பார்களா எனும் கருத்தும் அதில் அடங்கும்.

ஆயினும், அக்கூற்று தவறு என்பதை மறுத்துக் கூறி, ரபிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்கள் தங்களின் சொந்த விவகாரங்கள் குறித்துப் பேசியதாக ரபிசி குறிப்பிட்டிருந்தார்.