Home நாடு அன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்!- கைரி

அன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்!- கைரி

1521
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இனவாத அரசியலால் பிளவுப்பட்டிருக்கும் நாட்டினை, மீண்டும் ஒன்றுபட்ட நிலைக்குக் கொண்டு வரும் ஆற்றல் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கே உள்ளது என கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.

முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர், சிங்கப்பூரில், கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின்பு இவ்வாறு தெரிவித்தார்.

அன்வார் நவீன மொழியில் பேசுகிறார். இஸ்லாமியம் மற்றும் மலாய் இனத்தின் விவகாரம் எனும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாளலாம் எனும் நவீன சிந்தனை அவரிடத்தில் உண்டு. இவ்வாறான சூழல் எல்லா நிலைகளிலும் சாத்தியமாகும் வகையில் சமாளிக்க அவருக்குத் திறமை உண்டு” என கைரி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துன் மகாதீருக்குப் பிறகு, அன்வாரே சிறந்தப் பிரதமராக இருக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நம்பிக்கைக் கூட்டணி, இந்த மாற்றத்தை ஒப்புக் கொண்டது.

இதற்கிடையே, பல்வேறு தரப்புகள் பிரதமர் மகாதீர் முகமட், பதவியிலிருந்து வெளியேறாமல், தொடர்ந்து தலைமையில் இருக்கக் கோரி கூறியது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, பதில் கூறும் வண்ணமாக அன்வார் இப்ராகிம், வாக்குக் கொடுத்தபடி பிரதமர் பதவி குறிப்பிட்ட நேரத்தில் கைமாற்றிக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.