Home நாடு கேமரன் மலை: மக்கள் பிரச்சனையை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்!- சுரேஷ்

கேமரன் மலை: மக்கள் பிரச்சனையை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்!- சுரேஷ்

692
0
SHARE
Ad

கேமரன் மலை: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் வெறும் வாய் வார்த்தையாகப் பேசிக் கொண்டிருக்காமல் செயலில் இறங்கி, கேமரன் மலையில் எவ்வாறான பிரச்சனைகள் உள்ளன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என மலேசிய சமூகக் கட்சி (மலேசிய சோஷலிஸ்ட் கட்சி) ஆர்வலர் சுரேஷ் குமார் வலியுறுத்தினார்.

கடந்த பொதுத் தேர்தல்களில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ், மலேசியா கினிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஐசெக கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங், பூர்வக்குடி மக்கள் வாழும் கிராமம் ஒன்றிற்கு நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரனுடன் வருகைப் புரிந்ததைக் குறிப்பிட்ட சுரேஷ், அச்சந்திப்பின் போது, லிம் முன்னிருந்து மக்களுடன் பேசியதை கேள்விக்குட்படுத்தினார். ஏதேனும், மக்களுக்காகச் செய்ய வேண்டும் எனும் பட்சத்தில், அவை அத்தொகுதியில் போட்டியிட இருக்கும் எம். மனோகரன் மூலமாக வர வேண்டுமே தவிர, லிம் அவ்விடத்தில் முக்கியத்துவம் பெறுவது சரியானதல்ல என்றார்.    

#TamilSchoolmychoice

கடந்த 15 ஆண்டுகளாக கேமரன் மலையில் சேவையாற்றி வரும் சுரேஷ், கேமரன் மலையில் நான்கு முக்கியப் பிரச்சனைகள் சரிசெய்ய வேண்டியுள்ளதை நினைவூட்டினார். அதாவது, பழங்குடிகள் நிலம், காடழிப்பு, போக்குவரத்து நெரிசல், மற்றும், பி40 வருமானம் பெறும் மக்களின் நிலை, இவை அனைத்தையும் மிக நுட்பமாக ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்.