Home நாடு பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் சிவரஞ்சனி!

பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் சிவரஞ்சனி!

288
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகவும், ஏழைத் தொழிலாளர் சமூகத்திற்காகவும் இனபேதமின்றி போராடி வரும் கட்சி பிஎஸ்எம் என்னும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா. இந்தக் கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக சிவரஞ்சனி மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கட்சியின் 26-வது தேசிய மாநாட்டில் தலைமை செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிவராஜன் ஆறுமுகம் – பிஎஸ்எம்

ஏ. சிவராஜன் 9 ஆண்டுகளாக தலைமைச் செயலாளர் பதவியை வகித்த பின்னர் விலகியதைத் தொடர்ந்து இந்த தேர்வு நடைபெற்றுள்ளது.

“சிவரஞ்சனி 22 ஆண்டுகளாக தொழிற்சங்கவாதியாகவும், தொழிலாளர் உரிமை ஆர்வலராகவும் இருந்து வருகிறார், முன்னதாக பிஎஸ்எம் கட்சியின் தொழிலாளர் பிரிவுக்கு தலைமை தாங்கினார்,” என்று கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிவரஞ்சனி மாணிக்கம் – பிஎஸ்எம்
#TamilSchoolmychoice

சிவரஞ்சனி கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மேரு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பக்காத்தான் ஹராப்பானின் மரியம் அப்துல் ரஷீதிடம் தோல்வியடைந்தார்.

2024-2026 காலகட்டத்திற்கான புதிய மத்திய குழு உறுப்பினர்கள் பட்டியலையும் கட்சி அறிவித்துள்ளது.

டாக்டர் மைக்கல் ஜெயகுமார்

கட்சியின் தலைவராக டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ் துணைத் தலைவராக எஸ். அருட்செல்வன் ஆகியோர் தங்களின் பதவிகளில் தொடர்கின்றனர்.

துணைப் பொதுச் செயலாளராக பவானி கே.எஸ், கௌரவ பொருளாளராக சோ சூக் ஹூவா இடைக்காலப் பொருளாளராக எஸ். மாதவி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எஸ்.அருட்செல்வன் – பிஎஸ்எம்

இந்த ஆண்டுக்கான மாநாடு ஜோகூர் பாருவில் நடைபெற்றது. இது கட்சியின் வரலாற்றில் முதல் முறையாகும்.