Home நாடு சுங்கை சிப்புட் : கேசவன் பிகேஆர் வேட்பாளர்

சுங்கை சிப்புட் : கேசவன் பிகேஆர் வேட்பாளர்

704
0
SHARE
Ad
கேசவன் சுப்பிரமணியம்

சுங்கை சிப்புட் : கடந்த சில நாட்களாக பிஎஸ்எம் என்னும் பாரட்டி சோஷலிஸ்ட் கட்சி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் இணையுமா என்ற பரபரப்பு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிஎஸ்எம் கட்சியை பக்காத்தானில் இணைத்துக் கொள்வதில்லை என்ற முடிவை அந்தக் கூட்டணி எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுங்கை சிப்புட் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கேசவன் சுப்பிரமணியம் மீண்டும் அங்கு வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

மஇகா-தேசிய முன்னணி சார்பில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இங்கு போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பிஎஸ்எம் கட்சி பொதுத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.