கோலாலம்பூர்: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில், அம்னோ கட்சி, பூர்வக்குடி சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி ரம்லி முகமட் நூரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
பூர்வக்குடி சமூகத்திலேயே, ரம்லி, காவல் துறையில் உயர்ந்த பதவியை வகித்தவர். இதற்கிடையில், நிதிப் பிரச்சனைக் காரணமாக,மஇகா இம்முறை போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மலாய் மற்றும் பூர்வக்குடி மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே இம்முறை அம்னோ ரம்லியை தேர்தல் களத்தில் நிறுத்தத் திட்டமிட்டுள்ளது என நம்பப்படுகிறது.
ஐசெகவின் எம்.மனோகரன் மற்றும் மைபிபிபி தலைவர் எம். கேவியஸ் ஆகியோறோடு சேர்ந்து ரம்லி போட்டியிடவுள்ளார்.