Home நாடு ஆக்ஸ்போர்ட் யூனியன்: மலேசியாவைப் பிரதிநிதித்து முதல் முறையாக மகாதீர் உரை!

ஆக்ஸ்போர்ட் யூனியன்: மலேசியாவைப் பிரதிநிதித்து முதல் முறையாக மகாதீர் உரை!

1576
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா மற்றும் ஆசியானை பிரதிநிதித்து முதல் முறையாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆக்ஸ்போர்டு யூனியனில் (Oxford Union) பேசவுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இது குறித்து பல மாதக் காலமாக திட்டமிட்டு வந்ததாகவும், வருகிற ஜனவரி 18-ஆம் தேதி பிரதமர் உரை நிகழ்த்த உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதனை உறுதிப்படுத்தும் வகையில், பிரதமர், ஆக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் டேனியல் வில்கின்சனின் அதிகாரப்பூர்வக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் படத்தையும் சைட் சாதிக் அப்பதிவில் இணைந்திருந்தார்.

இதற்கு முன்னர் மோர்கன் பிரிமேன், நதலீ போர்ட்மேன், ஜோனி டேப், மைக்கல் ஜாக்சன், மலாலா, டேவிட் கேமரன் போன்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றியுள்ளனர்.