Home வணிகம்/தொழில் நுட்பம் தமிழகம்: ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும்!

தமிழகம்: ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும்!

970
0
SHARE
Ad

சென்னை: சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ‘டிக் டாக்’ எனப்படும் செயலியின் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரைப்பாடல்களுக்கு ஆடிப்பாடி, தேவையற்ற சாகசங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டது.

இம்மாதிரியான கலாச்சார சீரழிவுக்கு வித்திடும் எந்த ஒரு காரியத்தையும், தமிழக அரசு அனுமதிக்காது எனவும், இந்த செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் உறுதியளித்தார்.

மேலும் பேசிய அவர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் அனைவராலும்டிக் டாக்அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அதிகபட்சமான ஆபாசம் நிறைந்த காணொளிகளே நிரம்பிக் கிடக்கிறது என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

டிக் டாக்செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து, மத்திய அரசின் உதவியுடன், அவர்களை தொடர்புக் கொண்டு அந்த செயலிக்கு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.