Home இந்தியா பாஜக, அதிமுக கூட்டணி பிப்ரவரி 19-ம் தேதி உறுதி செய்யப்படும்!

பாஜக, அதிமுக கூட்டணி பிப்ரவரி 19-ம் தேதி உறுதி செய்யப்படும்!

1210
0
SHARE
Ad

சென்னை: வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகைப் புரிய இருக்கும் வேளையில், அவ்வருகையின் போது, பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையிலான கூட்டணி அமையுமா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களாக அதிமுகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து குழப்பமான சூழல் ஏற்பட்டு வரும் வேளையில், அடுத்த வார இறுதியில் அதற்கான தக்க பதில் கிடைத்து விடும் என நம்பப்படுகிறது. ஆயினும், ஒரு சில நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலமாகக் கிடைத்த செய்தியில், அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சியான திமுக வரும் தேர்தலில் காங்கிரஸ்சுடன் கூட்டணி அமைக்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.