கோலாலம்பூர்: அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளி தோற்றுனரான, ரவிசங்கர் சமீபத்தில் உடல் நலம் குன்றியிருந்ததாக இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகின. ஆயினும், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி, கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அவர் காலமானதாக செய்தி வெளிவந்துள்ளது. இவரது மறைவு மலேசியக் கலைஞர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடனத் துறையில் பல்வேறு பரிமாணங்களில் மக்களைக் கவர்ந்து வந்தவர். இவரது நடனக் குழு பல்வேறு அரசு மற்றும் உலகத் தரம் வாய்ந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. நடத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் என இரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மலேசியத் திரைப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் நுட்ப நடனக் கலை நிகழ்ச்சிகளில் இவரது பங்கு அளப்பரியது.
அவரது படைப்புகளான நடுவன், பரமேஸ்வரா, ஹனுமன், சிலப்பதிகாரம், திருநங்கை, ஷாமசுந்தரா போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
இவரது இறுதிச் சடங்கு, இன்று (புதன்கிழமை) பிரிக்பில்ஸ்சில் அமைந்துள்ள அஸ்தானா ஆர்ட்ஸ் அலுவலகத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.