சென்னை: விஷால், அர்ஜூன் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றியைப் பெற்றத் திரைப்படம் இரும்புத்திரை.
இத்திரைப்படத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இரும்புத்திரை முதல் பாகம் முழுக்கவும் இந்த நவீனக் காலக்கட்டத்தில் ஏற்படும் தொழிநுட்பம் சார்ந்த குற்றச் செயல்களை படம்பிடித்துக் காட்டியிருந்தது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘இரும்புத்திரை 2’படத்தினை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது ‘இரும்புத்திரை 2’ படத்திற்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.