Home நாடு கனிமொழியின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை, பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை!

கனிமொழியின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை, பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை!

867
0
SHARE
Ad

சென்னை: நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 18) தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நேற்று புதன்கிழமை வேலூர் தேர்தலை இரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முடிவானது, நடப்பு மோடி அரசின் திட்டமிட்ட சதி என கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கட்டுக் கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், அங்கு வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டதில் கோடிக்கணக்கான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதையும் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அதிபர் ராம்நாத் கோவிந்த் நேற்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை இரத்து செய்தார்.

இதனிடையே, தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்ததியதாக செய்திகள் வெளியாகின. ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்திய, அதிகாரிகள், அவரது வீட்டில் ஒன்றும் கிடைக்கப்படவில்லை என செய்தி வெளியிட்டனர். இது திமுக கட்சியின் மீது மோடி நடத்தும் தொடர் தாக்குதல் என கனிமொழி கூறினார்.

#TamilSchoolmychoice

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக கட்சியின் மகளிர் பகுதிச் செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கும் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படுகிறது.

இதுவரை தமிழகத்தில் மட்டும் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.