Home கலை உலகம் தனக்கே உரிய பாணியில், மீண்டும் துப்பு துலக்க துப்பறிவாளன் 2!

தனக்கே உரிய பாணியில், மீண்டும் துப்பு துலக்க துப்பறிவாளன் 2!

907
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் நல்லதொரு வரவேற்பினை இரசிகர்கள் மத்தியில் பெற்றது. இத்திரைப்படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை விஷால் தயாரித்திருந்தார். படம் முழுக்கவும் குற்றம் தொடர்பான திகில் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன.

தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் துருக்கியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷாலை நேரில் சந்தித்த மிஷ்கின் படத்தின் கதையைக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்துதுப்பறிவாளன் 2’ விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.