Home இந்தியா இந்தியா தேர்தல்: நரேந்திர மோடி வாக்களித்தார்!

இந்தியா தேர்தல்: நரேந்திர மோடி வாக்களித்தார்!

700
0
SHARE
Ad

அகமதாபாத்: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில், குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் ராணிப்பில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

வாக்களித்தப்பின், தனது மை வைத்த விரலை உயர்த்தி காட்டியபடி சிறுது தூரம் நடந்து சென்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

திறந்த வாகனத்தில் மெதுவாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்த மோடி, வாக்குச்சாவடிக்குள் செல்வதற்கு முன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு கை அசைத்தப்படியே வந்தார்

#TamilSchoolmychoice

“நல்ல எதிர்காலத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது. பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அட்டைஎன மோடி கருத்துரைத்துள்ளார்.