Home நாடு கிள்ளான் பள்ளத்தாக்கு: ஏப்ரல் 24 தொடங்கி 4 நாட்களுக்கு நீர் விநியோகத் தடை!

கிள்ளான் பள்ளத்தாக்கு: ஏப்ரல் 24 தொடங்கி 4 நாட்களுக்கு நீர் விநியோகத் தடை!

877
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு, சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மேம்பாட்டுப் பணிகள் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் 577 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.

கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா அலாம், கோம்பாக், கோலா லங்காட்டின் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய ஆறு பகுதிகளில் நாளை 620,835 மக்கள் இந்த நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையில், ஷாபாஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்உறவு மற்றும் தொடர்புத்தலைவர், அப்துல் ராஓப் அகமட் கூறுகையில், சுமார் 82 தொட்டிகளை அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருப்பதாகவும், மேலும் 17 பெரிய அளவிலான நீர் வாகனங்களை தயார் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

வாகனங்கள் மூலம் கூடுதல் உதவிகளை ஏற்பாடு செய்வதோடு இல்லாமல், 106 நிலையான தொட்டிகளை முக்கியமான பகுதிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், கூழ்மப்பிரிப்பு மையங்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்தார்.

மரணங்கள் மற்றும் திருமணங்கள் போன்ற அவசரத்திற்கு, வாடிக்கையாளர்கள் ஷாபாஸ் நிறுவனத்தை தொலைபேசி எண் 15300, மற்றும் ‘எஸ்எம்எஸ் டேங்கர்’ என்று பதிவுச் செய்து 15300 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனக் கூறினார். மேலும்,  வாட்ஸ் அப் மூலமாக 0192816739 அல்லது 0192800919-க்கு அந்நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார்.