Home உலகம் கொழும்பு தாக்குதல்கள்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு, இண்டர்போல் இலங்கை வருகை!

கொழும்பு தாக்குதல்கள்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு, இண்டர்போல் இலங்கை வருகை!

995
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் மூன்று தேவாலயங்களிலும், மூன்று தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 300 பேர் உயிரிழந்தார்கள். 35-க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவல் துறைத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குண்டு இலங்கை நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அவசரமாக கூடுகிறது.

#TamilSchoolmychoice

மேலும், நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அனைத்துலக காவல் அமைப்பான இண்டர்போல் குழு கொழும்பு விரைந்துள்ளது.