Home நாடு சண்டாக்கான் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியில்லை!

சண்டாக்கான் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியில்லை!

895
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற மே 11-ஆம் தேதி நடக்க இருக்கும் சண்டாக்கான் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடப்போவதில்லை என முடிவு செய்துள்ளது.

நேற்று இரவு திங்கட்கிழமை புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற உச்சமட்டக் கூட்டத்திற்குப் பின்னர் தேசிய முன்னணியின் துணைத் தலைவரான முகமட் ஹசான் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மசீச தலைவர் வீ கா சியோங், மஇகா தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் 28-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் வோங் டியன் பாட்டின் மரணத்திற்குப் பின் சண்டாக்கான் நாடாளுமன்றம் காலியானது.

வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட இருக்கும் வேளையில், மே 7-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடக்க இருக்கிறது.

இதற்கிடையில், கடந்த மாதங்களில் மாநில சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி கட்சிக்கு ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வருகிற 15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி தங்களின் குறைகளை சரி செய்து, தேர்தலை எதிர் நோக்கும்  நிலையில் தங்களை தயார் செய்துக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.