Home நாடு 1 மில்லியன் படித்தொகையை புத்ராஜெயா நஜிப்புக்கு வழங்கியது!

1 மில்லியன் படித்தொகையை புத்ராஜெயா நஜிப்புக்கு வழங்கியது!

663
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மே மாதத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 1 மில்லியன் ரிங்கிட் படித்தொகையை, புத்ராஜெயா அவரது அபின் வங்கிக் கணக்கில் செலுத்தியது என பிரதமர் துறை தலைமை கணக்காளர் சாரினா யூசோப் கூறினார். இத்தொகையினை அமைச்சரவை முடிவு செய்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமராக அவர் பதவி வகித்த போது நஜிப்பின் மாதச் சம்பளம் 22,826.65 ரிங்கிட் எனவும், அதனைத் தவிர்த்து அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் படித்தொகையும் வழங்கப்பட்டது என சாரினா கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு மே மாதம் வரையிலுமான நஜிப்பின் மாதச் சம்பளம் 58,605.15 ரிங்கிட்டை எட்டியது என அவர் கூறினார். இந்த பணங்களைப் பெற்ற வங்கிக் கணக்கானது,  தற்போது விசாரிக்கப்பட்டு வரும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வங்கிக் கணக்குகளுடன் சேர்க்கப்படாதது என அவர் குறிப்பிட்டார்.