Home நாடு தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

768
0
SHARE
Ad

ஈப்போ: சிம்மோரில் அமைந்துள்ள தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிட கட்டுமானத்திற்கான 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அப்பள்ளிக் கூடத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இருக்கிறார்கள். ஆயினும், தற்போதுள்ள இடத்தில் போதுமான இட வசதி இல்லாததால் அது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்பிரச்சனையை கையாளும் வகையில், புதிய கட்டிடத்தை அமைக்க கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 36 ஆசிரியர்களும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

மாணவர்களின் நலன் மற்றும் பள்ளி சூழியல் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான எல்லா முயற்சிகளும் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.