தேசிய மற்றும் அரசாங்க உதவி மான்யம் பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த பற்றுச் சீட்டுகளை மே 16 முதல் 20 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட மேக்டொனால்ட் நிறுவனத்தின் தலைமை சந்தை விற்பனை அதிகாரி மெலாத்தி அப்துல் ஹாய் “ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்கள் மட்டுமல்ல. மாணவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுத் தருபவர்களும் ஆசிரியர்கள்தான்” என்று கூறினார்.
2019-ஆம் ஆண்டுக்கான ‘மேக்டொனால்ட் தன்முனைப்பு ஆசிரியர்’ விருதுகளை (2019 McDonald’s Inspirational Teacher trophy) 25 ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சுடன் இணைந்து கடந்த மே 13-ஆம் தேதி மேக்டொனால்ட் வழங்கியது. இந்த விருதைப் பெற்ற ஆசிரியர்கள் விருதுடன் 5 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தையும் பரிசாகப் பெற்றனர்.
மூன்றாவது ஆண்டாக இந்த விருதுகளை மேக்டொனால்ட் வழங்குகிறது. இந்த ஆண்டு மட்டும் இந்த விருதுக்காக சுமார் 7,500 விண்ணப்பங்களை மேக்டொனால்ட் பெற்றது.