ஒருவன் கல்வியிலோ, தொழிலிலோ, செல்வச் செழிப்பிலோ உயர்ந்து வளர்ந்தால் அதனை மகிழ்ச்சியுடன் சற்றும் பொறாமையின்றி பகிர்ந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் இருவர்தான்.
ஒருவர் பெற்ற அன்னை அல்லது தந்தை!
மற்றொருவர் ‘இவன் எனது மாணவன்’ எனப் பெருமிதப்படும் ஆசிரியர்.
வருமானம் தரும் தொழில் என்பதையும் தாண்டி, இன்று மலேசியா முழுவதும் தமிழ்ப் பள்ளிகளிலும் மற்ற பள்ளிகளிலும், தங்களின் நேரம், உழைப்பு, உடல்நலம் கருதாது – மாணவச் செல்வங்களை சிறந்த முறையில் வார்த்தெடுக்க வேண்டும் – என அயராது பாடுபட்டு வரும் இலட்சக்கணக்கான ஆசிரியர் பெருமக்களுக்கு, இன்றைய ஆசிரியர் தினத்தில் செல்லியல் குழுமத்தின் சார்பிலான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியர்களின் சேவைகள் என்றும் தொடரட்டும்! அவர்களின் தியாகத்திற்கு தலைவணங்குவோம்!
-செல்லியல் குழுமம்