இந்த விவகாரம் குறித்து தமக்கும், பினாங்கு மாநில முதல்வருக்கும் தெரியாது எனவும், மேலும் இது குறித்து போக்குவரத்து அமைச்சரும், கெடா மாநில முதல்வர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் முகமட்டும் அறியாதிருப்பது வியப்பாக உள்ளது என லிம் தெரிவித்தார்.
இரண்டு நிறுவனங்கள் பில்லியன் ரிங்கிட் கணக்கிலான விமான நிலையத்தை செபெரங் பிராயில் கட்டுவதற்கு இணக்கம் கண்டுள்ளதாக ஸ்டார் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த தகவலை ஸ்டாருக்கு தெரிவித்த வட்டாரம் கூறுகையில், பினாங்கு விமான நிலையத்தைக் காட்டிலும் இவ்விமான நிலையம் சிறப்பாக இயங்கும் எனவும், கூலிமில் கட்டப்பட இருக்கும் விமான நிலையத்திற்கு போட்டியாக இது கட்டப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்ததாக பதிவிட்டிருந்தது.