இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் கூடி போரட்டம் நடத்தி வருகிறார்கள். சீன நாட்டின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் குடை போராட்டம் நடந்தது.
இதில் சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் வாழ் மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிராக செயல்படும் என கருதப்படும் சீனாவின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த சட்டத்திருத்தமானது ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கிறது.
மக்களுடைய கருத்துக்கு யாரும் செவிசாய்க்க மறுப்பதன் விளைவாகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அனைத்துலக நிதி மையமாக விளங்கும் ஹாங்காங்கின் மரியாதையை மட்டும் இந்த சட்டம் கெடுக்காமல், நீதி அமைப்பின் மீதும் அதன் தாக்கம் செலுத்தப்பட உள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.