சோதனையின் போது சாத்தியமான ஆபத்தை பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. ஆயினும், அது குறித்த விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
போயிங் நிறுவனத்தின் அதிகமாக விற்பனையான மேக்ஸ் 737 விமானங்கள் இரண்டு விபத்துக்களுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் தரையிறக்கப்பட்டது.
கடந்த மாதம், போயிங் நிறுவனம் மேக்ஸ் 737-இல் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த ஒப்புக் கொண்டதன் பேரில், மீண்டும் ஜூன் மாத இறுதியில் அது செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அது நடந்திருந்தால் ஜூலை மாத தொடக்கத்தில் 737 விமானங்கள் பறக்கும் சோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம்.