Home நாடு விவாதத்தின் போது அரசியல் கட்சி, இனம், மதம் போன்ற விவகாரங்களை தவிர்க்கவும்!- ஜோகூர் சுல்தான்

விவாதத்தின் போது அரசியல் கட்சி, இனம், மதம் போன்ற விவகாரங்களை தவிர்க்கவும்!- ஜோகூர் சுல்தான்

699
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில சட்டமன்ற கூட்டத்தின் போது, வார்த்தைகளின் நெறிகளையும், அரசியல் கட்சித் தொடர்பான விவகாரங்கள் மற்றும் இன, மதம் குறித்த பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாம் என்று ஜோகூர் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதிகளின் சேவை மற்றும் செயல்திறனை மக்கள் எப்போதும் மதிப்பபிட்டு வருகிறார்கள். எனவே, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். சுயநலத்திற்காக என்றும் செயல்படாதீர்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை இரண்டாவது தவணைக்கான ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் அமர்வைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் சுல்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், விவாதத்திற்கு முன் மாநில சட்டத்தின் பின்னணியை அறிந்து கொள்ளும்படி ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அவர் நினைவுப்படுத்தினார்.