Home உலகம் ஒரு சில குறைபாட்டினால் மேக்ஸ் 737 மீண்டும் இயங்குவது தள்ளி போடப்பட்டுள்ளது!

ஒரு சில குறைபாட்டினால் மேக்ஸ் 737 மீண்டும் இயங்குவது தள்ளி போடப்பட்டுள்ளது!

753
0
SHARE
Ad

வாஷிங்டன்: போயிங் 737 மேக்ஸ் விமான சோதனையின் போது புதிய குறைபாட்டை அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பில் மேக்ஸ் 737 விமானத்தின் இயக்கம் மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சோதனையின் போது சாத்தியமான ஆபத்தை பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ)  அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. ஆயினும், அது குறித்த விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

போயிங் நிறுவனத்தின் அதிகமாக விற்பனையான மேக்ஸ் 737 விமானங்கள் இரண்டு விபத்துக்களுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் தரையிறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கடந்த மாதம், போயிங் நிறுவனம் மேக்ஸ் 737-இல் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த ஒப்புக் கொண்டதன் பேரில், மீண்டும் ஜூன் மாத இறுதியில் அது செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஒருவேளை அது நடந்திருந்தால் ஜூலை மாத தொடக்கத்தில் 737 விமானங்கள் பறக்கும் சோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம்.