Home நாடு ஜோகூர் சுல்தான் அடுத்த மாமன்னர் – பேராக் சுல்தான் துணை மாமன்னர்

ஜோகூர் சுல்தான் அடுத்த மாமன்னர் – பேராக் சுல்தான் துணை மாமன்னர்

449
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் 17-வது மாமன்னராக ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் பதவியேற்பார் என்றும் அவருக்குத் துணையாக, துணை மாமன்னராக பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா செயல்படுவார் என்றும் அரண்மனையின் அரச முத்திரைக் காப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) அறிவித்தார்.

பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா

சுல்தான் இப்ராகிமின் ஆட்சி ஜனவரி 31 (2024) தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடரும். சுல்தான் நஸ்ரின் பதவிக் காலமும் அதே தேதியில் தொடங்கும்.

மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் இன்று காலையில் திரெங்கானு சுல்தான் தலைமையில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இன்றைய கூட்டத்தில் பெர்லிஸ், கிளந்தான் ஆட்சியாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

நாட்டின் 16-வது மாமன்னராக சேவையாற்றிய பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 31 ஜனவரி 2019 முதல் பகாங் சுல்தான் மாமன்னராக சேவையாற்றி வருகிறார்.

கோவிட்-19 பிரச்சனைகள், 3 பிரதமர்களின் ஆட்சிக் காலம், 15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதன் முதலாக நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது என பல்வேறு வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கியதாக பகாங் சுல்தானின் ஆட்சிக் காலம் அமைந்தது.

ஜோகூர் சுல்தானின் தந்தையார் சுல்தான் இஸ்கண்டார் இஸ்மாயில் நாட்டின் மாமன்னராக 1984 முதல் 1989 வரை பணியாற்றியிருக்கிறார்.