Home One Line P1 லங்காவி: மணிக்கு 100.8 கிமீ வேகத்தில் வீசிய காற்றில் கடைகள், வாகனங்கள் சேதம்!

லங்காவி: மணிக்கு 100.8 கிமீ வேகத்தில் வீசிய காற்றில் கடைகள், வாகனங்கள் சேதம்!

724
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை இரவு லங்காவி தீவின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசியதில் பல கடைகள் பாதிக்கப்பட்டன.

15 நிமிடம் நீடித்த அச்சம்பவத்தின் போது, ​​பாதிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக் கருதி அவ்விடத்தை ஓடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

கெடாவாங், போகோர், பாடாங் மாட்சிராட், அயர் ஹாங்காட், குவா மற்றும் உலு மலாக்கா ஆகிய இடங்கள் இந்த சம்பவத்தில் பெரும்பாலாக பாதிக்கப்பட்டன. பலத்த மழை மற்றும் காற்று காரணமாக பல வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதுமரங்கள் சாய்ந்தன.

#TamilSchoolmychoice

முக்கிய சாலைகளில் போக்குவரத்தைத் தடுக்கும் விதமாக மரங்கள் சாய்ந்து கிடக்கும் படங்களும் சமூகப்பக்கங்களில் பகிரப்பட்டன.

தற்போது, ​​லங்காவி மாவட்ட அலுவலகம், மலேசிய காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பொது பாதுகாப்பு படை  உள்ளிட்ட பல நிறுவனங்கள் சேதங்கள் குறித்த கணக்குகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இதுவரையிலும், எந்தவிதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சீனாவின் கிழக்கே இருக்கும் லெக்கிமா சூறாவளியால் பல வட மாநிலங்களில் புயல்கள் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) உறுதிப்படுத்தியுள்ளது.

வினாடிக்கு 28 மீட்டர் வேகத்தில் பதிவுசெய்யப்பட்ட வேகம், அதாவது மணிக்கு 100.8 கிலோமீட்டருக்கு சமமாகும். இருப்பினும், இரண்டாவது அலை, சூறாவளியின் இருப்பிடம் பொறுத்தது. தற்போது இரண்டாவது அலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஒரு முறை மட்டுமே இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கும்,” என்றுஅது குறிப்பிட்டுள்ளது.