Home One Line P1 ஏழாவது நாளாக நோராவை தேடும் பணி தொடர்கிறது!

ஏழாவது நாளாக நோராவை தேடும் பணி தொடர்கிறது!

843
0
SHARE
Ad

நீலாய்: இன்றோடு ஒரு வாரமாக காணாமல் போன அயர்லாந்தைச் சேர்ந்த நோரா அன் என்ற 15 வயது சிறுமியை தேடும் நடவடிக்கைகள் தொடர்கிறது. அவரைக் கண்டுபிடிப்பதற்கான மீட்புக் குழுவின் உறுதிப்பாடு ஒருபோதும் குறையவில்லை.

சிறுமியை தேடும் நடவடிக்கை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரையிலும் தொடர்கிறதென்று பெர்னாமா குறிப்பிட்டுள்ளது. அடர்த்தியான காடுகள், மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அடர்த்தியான மூடுபனி காரணமாக இவ்வாறு செய்யப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

ஐந்தாவது நாள் மற்றும் நேற்றிரவு வெள்ளிக்கிழமை மழை உள்ளிட்ட கணிக்க முடியாத வானிலை மாற்றங்களால், மதியம் வரையிலும் தேடல் பகுதிகள் மேகமூட்டமாகவும், இருட்டாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

காலை 7 மணியளவில், உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடக பணியாளர்கள் மீட்புக் குழுவின் செயல்பாட்டை பதிவுச் செய்து வருவதாகவும், இதற்கிடையில், செயல்பாட்டுப் பணியாளர்களைக் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள் காலை 7 மணியளவில் சம்பவ இடத்திற்குள் நுழைவதைக் காண முடிகிறது என்றும் பெர்னாமா கூறியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, செயல்பாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 261 உறுப்பினர்களாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் ஹாஜி பெருநாளையும் கருத்தில் வைக்காது, தம் மகளை தேடும் பணியில் முழு மூச்சாக இறங்கியுள்ள மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நோராவின் தாயார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.