Home One Line P1 டோங் சோங் மீதான காவல் துறை விசாரணை தொடங்கியது!

டோங் சோங் மீதான காவல் துறை விசாரணை தொடங்கியது!

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீன கல்வியாளர் குழு டோங் சோங் தலைவர் டான் தை கிம் மற்றும் பொதுச் செயலாளர் எங் சாய் ஹெங் ஆகியோர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தங்களது வாக்குமூலத்தைத் தந்தனர்.

மலேசியா பாடத்திட்டத்தில் அரேபிய வனப்பெழுத்து அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டனர்.

டோங் சோங் துணைத் தலைவர் யாங் யின் சோங், மத்திய குழு உறுப்பினர்கள் லோ சீ சோங் மற்றும் யோஹ் சாய் கோக் ஆகியோருடன், இருவரும் காலை 9.30 மணிக்கு புக்கிட் அமான் காவல் தலைமையகத்திற்கு வந்தனர்.

#TamilSchoolmychoice

அவர்களது வழக்கறிஞர் ஆபிரகாம் ஆவின் கூற்றுப்படி, டோங் சோங்கிற்கு எதிராக மொத்தம் 18 காவல் துறைப் புகார்கள் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரேபிய வனப்பெழுத்து சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்த்தது தொடர்பாக மலாய் குழுக்களிடமிருந்து டோங் சோங் எதிர்ப்பினை எதிர்க்கொண்டது. இந்தப் பாடத்திட்டம் இஸ்லாமியமயமாக்கலின் ஒரு வடிவம் என்று சோங் சோங் கூறியிருந்தது.