ரசிக்க ருசிக்க சீசன் 5
ரசிகர்களின் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து ‘ரசிக்க ருசிக்க’ மீண்டும் புத்தம் புது பொலிவோடு சீசன் 5 எதிர்வரும் செப்டம்பர் 1 -ஆம் தேதி இரவு 9 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் துல்லிய (எச்.டி) அலைவரிசை 231-ல் ஒளியேறவுள்ளது.
12 அத்தியாயங்கள் கொண்ட இந்நிகழ்ச்சியை மீண்டும் அறிவிப்பாளர் பால கணபதி வில்லியம் தொகுத்து வழங்குவார். இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு களிக்கலாம்.
திகில் சீசன் 5
4 சீசன்கள் ஒளியேறிய திகில் நிகழ்ச்சி மீண்டும் பல திகில் கதைகளுடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 231-இல் ஒளியேறவுள்ளது. 13 அத்தியாயங்கள் கொண்ட திகில் சீசன் 5 நிகழ்ச்சி, மலேசியாவில் நடந்த திகில் கதைகள் மறுகாட்சி அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.