Home One Line P2 அஸ்ட்ரோவில் புதுப்பொலிவுடன் ரசிக்க ருசிக்க – திகில்!

அஸ்ட்ரோவில் புதுப்பொலிவுடன் ரசிக்க ருசிக்க – திகில்!

969
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நான்கு சீசன்கள் கடந்து தற்போது புதிய கோணத்தில் அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசையில் ரசிக்க ருசிக்க மற்றும் திகில் ஒளியேறவுள்ளது. இந்நிகழ்ச்சிகளை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் கண்டு களிக்கலாம்.

ரசிக்க ருசிக்க சீசன் 5

ரசிகர்களின் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து ‘ரசிக்க ருசிக்க’ மீண்டும் புத்தம் புது பொலிவோடு சீசன் 5 எதிர்வரும் செப்டம்பர் 1 -ஆம் தேதி  இரவு 9 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் துல்லிய (எச்.டி) அலைவரிசை 231-ல் ஒளியேறவுள்ளது.

பயணங்களின் ஊடே ஆங்காங்கே இருக்கும் சிறந்த உணவகங்களையும், உணவுகளையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்க கடந்த 2014-ஆம் ஆண்டு ‘ரசிக்க ருசிக்க’ நிகழ்ச்சி ஆஸ்ட்ரோ அலைவரிசையில் ஒளியேறியது.

#TamilSchoolmychoice

12 அத்தியாயங்கள் கொண்ட இந்நிகழ்ச்சியை மீண்டும் அறிவிப்பாளர் பால கணபதி வில்லியம் தொகுத்து வழங்குவார். இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு களிக்கலாம்.

திகில் சீசன் 5

எத்தனையோ மர்மம் நிறைந்த திகில் சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன. பார்ப்பவரின் மனத்தில் பயம் நிறைந்த காட்சி எழுப்பும் கதைகளுடன் அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையின் திகில் நிகழ்ச்சியாகும்.

4 சீசன்கள் ஒளியேறிய திகில் நிகழ்ச்சி மீண்டும் பல திகில் கதைகளுடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 231-இல் ஒளியேறவுள்ளது. 13 அத்தியாயங்கள் கொண்ட திகில் சீசன் 5 நிகழ்ச்சி, மலேசியாவில் நடந்த திகில் கதைகள் மறுகாட்சி அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.