அம்பாங் – சுதந்திர தின இரவன்று அம்பாங்கில் கைகலப்பில் ஈடுபட்டதாகக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பேராக் பிகேஆர் கட்சியின் தலைவர் பார்ஹாஷ் வாஃபா சல்வாடோர் ரிசால் முபாராக் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அம்பாங் ஜெயா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
நேற்று காலை 10 மணியளவில் அம்பாங் ஜெயா காவல் நிலையம் வந்த அவர் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவர் மாலை 5.00 மணியளவில் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டார் என சிலாங்கூர் குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் பாட்சில் அஹ்மாட் தெரிவித்தார்.
பார்ஹாஷ் வாஃபா மீது போதைப் பொருள் உட்கொண்டிருந்தாரா என சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அந்த சோதனையில் அவர் போதைப் பொருள் எதையும் உட்கொண்டிருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறிய பாட்சில் அஹ்மாட் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டிருப்பதாவும் கூறினார்.