Home One Line P1 முகாபேயின் நல்லுடல் ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படுகிறது

முகாபேயின் நல்லுடல் ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படுகிறது

998
0
SHARE
Ad

சிங்கப்பூர் – கடந்த சில மாதங்களாக சிங்கையில் சிகிச்சை பெற்று வந்த ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ரோபர்ட் முகாபே கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 6-ஆம் தேதி தனது 95-வது வயதில் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது நல்லுடல் இன்னும் சிங்கையில் வைக்கப்பட்டு, இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கு கூட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அவரது நல்லுடல் வைக்கப்பட்டிருக்கும் இறுதிச் சடங்குகளுக்கான மையத்தில் இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஜிம்பாப்வே நாட்டின் துணையதிபர் கெம்போ மொஹாடியும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரது நல்லுடல் நாளை புதன்கிழமை காலையில் அவரது தாய்நாடான ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படும் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பிரிட்டனின் முன்னாள் ஆப்பிரிக்கக் காலனி நாடான ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்ற பின்னர் நடைபெற்ற கொரில்லா போரின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முகாபே அதைத் தொடர்ந்து சுமார் 37 ஆண்டுகள் அந்நாட்டு அதிபராகப் பதவி வகித்தார். 2017-இல் இராணுவத்தால் அவரது ஆட்சி வீழ்த்தப்பட்டது.

சர்வாதிகாரப் போக்கு, இனவெறி அரசியல் எனப் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய முகாபே நோய்வாய்ப்பட்ட நிலையில் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.