Home One Line P2 ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்!

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்!

1101
0
SHARE
Ad

ஜிம்பாப்வே: ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமானார் என்று அந்நாட்டின் அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

முகாபே சிங்கப்பூரில் இறந்ததாகவும், அங்கு அவர் சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாக அறிந்த ஒரு ஆதாரம் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வெள்ளை காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, அவர் முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது, ஆபிரிக்க விடுதலை வீரராகவும், இன நல்லிணக்கத்தின் சாம்பியனாகவும் முகாபே திகழ்ந்தார்.