Home One Line P1 மகாதீர்- மோடி உரையாடலின் போது ஜாகிர் பெயர் ஒரு முறைதான் சொல்லப்பட்டது, அதற்கு மகாதீர் பதிலளிக்கவில்லை!

மகாதீர்- மோடி உரையாடலின் போது ஜாகிர் பெயர் ஒரு முறைதான் சொல்லப்பட்டது, அதற்கு மகாதீர் பதிலளிக்கவில்லை!

1085
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் நடந்த சந்திப்பில் எழுப்பினார் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜாகிரின் பெயர் ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மற்ற பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதில் மும்முரமாக இருந்ததால் மகாதீர் பதிலளிக்கவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

தற்போதைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தனது அமைச்சு மட்டத்தில் எந்த கலந்துரையாடலும் இல்லை என்றும் சைபுடின் தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் நிரந்தர குடியுரிமைப் பெற்ற ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பக் கோரிய இந்தியாவின் இராஜதந்திர குறிப்புகள் மட்டுமே கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக, ஜாகிரின் பிரச்சனை இந்தியாவுடனான மலேசியாவின் உறவை பாதிக்கவில்லை என்று சைபுடின் கூறினார்.

இதற்கிடையில், பயங்கரவாதம் மற்றும் பண மோசடி என்ற சந்தேகத்தின் பேரில் ஜாகிரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நரேந்திர மோடி மகாதீரிடம் கேட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.