Home One Line P2 சித்தார்த்- ஜிவி பிரகாஷ் இணையும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’

சித்தார்த்- ஜிவி பிரகாஷ் இணையும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’

1575
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இன்று வெள்ளிக்கிழமை சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கும் ஒரு போக்குவரத்து காவல் துறை அதிகாரியாக சித்தார்த் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஜிவி பிரகாஷ், தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்

இப்படத்தின் வெளியீட்டை அடுத்து சித்தார்த்தும், ஜிவி பிரகாஷ்சும்  டுவிட்டரில் ஒரு காணொளியைப் பதிவுச் செய்துள்ளனர். அக்காணொளியில் அவர்கள் கூறியதாவது “நாளை (இன்று வெள்ளிக்கிழமை) வெளியாக இருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தினை அனைவரும் சென்று பார்க்க வேண்டும். அதிகமான அதிரடி காட்சிகள், காதல், உணர்வு சம்பந்தப்பட்டக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. பிச்சைக்காரன் திரைப்பட இயக்குனர் சசி இப்படத்தினை இயக்கியுள்ளார்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியான போதே, இப்படத்திற்கு அதிகபடியான எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தன.  கீழ்காணும் இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: