Home One Line P1 சாலே சைட் கெருவாக், பண்டிகார் பிகேஆரில் இணைகிறார்களா?

சாலே சைட் கெருவாக், பண்டிகார் பிகேஆரில் இணைகிறார்களா?

916
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் அமைச்சர் சாலே சைட் கெருவாக் மற்றும் முன்னாள் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் முலியா ஆகியோர் பிகேஆரில் இணைவார்கள் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.

யுனைடெட் சபா நேஷனல் அமைப்பின் (உஸ்னோ) தகவல் தொடர்புத் தலைவர் முஸ்லி ஓலி பிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திடம் (எப்எம்டி) கூறுகையில், பஜாவ் சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களில் இவ்விருவரும் அடங்குவர் எனக் கூறினார். பிகேஆரைத் தேர்ந்தெடுப்பது மத்திய அரசாங்கத்தில் கட்சியின் நிலைப்பாடு காரணமாகத்தான் என்றும் பெர்சாத்து போலல்லாமல், பிகேஆருக்கு செல்வாக்கு இருப்பதாக முஸ்லி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அம்னோவை விட்டு வெளியேறிய பின்னர் மே மாதத்தில் பண்டிகார் உட்பட உஸ்னோவுடன் பலர் இணைந்தனர். முன்னாள் சபா அம்னோ தகவல் தலைவர் உஸ்னோவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆயினும், கடந்த மாதம் பதவியில் இருந்து அவர் விலகினார்.

#TamilSchoolmychoice

செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசிய தின கொண்டாட்டத்திற்குப் பிறகு பண்டிகார் மற்றும் சாலே ஆகியோர் தங்களின் பிகேஆர் உறுப்பினர் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும், இவை யாவும் வதந்தியே என்று சாலே தொடர்புக் கொண்டபோது தெரிவித்தார் என்று எப்எம்டி தெரிவித்துள்ளது. பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை உஸ்னோ ஏற்பாடு செய்த அரசியலற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்ததாக அவர் கூறினார்.