Home One Line P2 ராபர்ட் முகாபேவுக்கு 4 மாதங்களாக சிங்கை மருத்துவமனையில் சிகிச்சை

ராபர்ட் முகாபேவுக்கு 4 மாதங்களாக சிங்கை மருத்துவமனையில் சிகிச்சை

795
0
SHARE
Ad

சிங்கப்பூர் – இன்று 94 வயதில் நமது நாட்டின் பிரதமராக வலம் வரும் துன் மகாதீருக்கு முன்பாக ஒருவர் அந்த வயதில் ஒரு நாட்டின் அதிபராக இருந்தார் என்றால் அது ராபர்ட் முகாபேதான். ஆப்பிரிக்காவின் சிம்பாப்வே நாட்டின் அதிபராக பல ஆண்டுகள் அவர் அதிபராக இருந்தார்.

ஆனால் தற்போது அவர் சிங்கப்பூரில் கடந்த நான்கு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகாபே சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான் என்றாலும், கடந்த 4 மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது இப்போதுதான் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

அவருக்கு என்ன நோய் என்பது குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.