Home One Line P1 மலேசியரான ஃபேபியன் டாசனுக்கு, கனடாவின் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது!

மலேசியரான ஃபேபியன் டாசனுக்கு, கனடாவின் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது!

796
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்ளூர் செய்தித்தாள்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய மலேசியரான ஃபேபியன் டாசன் என்ற பத்திரிகையாளர் கனடாவின் சிறந்த பத்திரிகையாளர் விருதினைப் பெற்றுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பத்திரிகைக்கு பங்களிப்பு செய்தவர்களை அங்கீகரிக்கும் கனடாவின் புரூஸ் ஹட்ச்சன் வாழ்நாள் சாதனையாளர் விருதை (Canada’s Bruce Hutchison Lifetime Achievement Award) வென்ற முதல் ஆசியர் கிள்ளானைச் சேர்ந்த டாசன் ஆவார்.

நான் மலேசிய பத்திரிகைகளின் தயாரிப்பு என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இங்குள்ள சில சிறந்த செய்தி நிறுவங்களுடன் பணிபுரிந்துள்ளேன்” என்று டாசன் கூறினார்.

#TamilSchoolmychoice

நான் கனடாவில் கற்றுக்கொண்டதை எப்போதும் பயன்படுத்தினேன். அதற்காக, எனது தாயகம் எனக்குக் கொடுத்த அனுபவங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்,” என்றார்.

1988-ஆம் ஆண்டில் கனடாவுக்குச் சென்ற டாசன், மலேசியர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் என்ன செய்தாலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தூண்டப்படுகிறார்கள் என்றார்.

இந்த விருது எனக்கு வழங்கப்படுவதில் நான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருதை வென்ற முதல் ஆசியராக இருப்பது உண்மையில் ஒரு பாக்கியம், ”என்று அவர் கூறினார்.

டாசன் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார்.