Home One Line P2 ஆசியாவின் சக்திவாய்ந்த வணிகப் பெண்மணிகளின் பட்டியலில் மலேசியப் பெண்மணி

ஆசியாவின் சக்திவாய்ந்த வணிகப் பெண்மணிகளின் பட்டியலில் மலேசியப் பெண்மணி

905
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2019-ஆம் ஆசியாவில் மிகச் சக்தி வாய்ந்த 25 பெண் வணிகர்களை புகழ் பெற்ற போர்ப்ஸ் வணிக சஞ்சிகை  பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் 35 வயதே நிரம்பிய டான் ஹூய் லிங் என்ற சீன வணிகப் பெண்மணி.

யார் இந்தப் புதிய பெயர் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

அண்மையக் காலங்களில் வாடகைக் கார் வணிகத்திலும், உணவகங்களிலிருந்து பயனர்களுக்கு உணவுகளை வாங்கி அனுப்புவதிலும், வணிக் சூழ்நிலையையே முற்றிலும் மாற்றியமைத்த ‘கிராப்’ (Grab) நிறுவனத்தின் இணை தோற்றுநரும் அந்த நிறுவனத்தின் நடப்பு தலைமை நடவடிக்கை அதிகாரியும்தான் அவர்.

#TamilSchoolmychoice

8 நாடுகளில் 336 நகர்களில் கிராப் வாடகைக் காரின் ஆதிக்கமும், வணிக சந்தைக்கான பங்கும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது.

2012ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இன்னொரு இணை தோற்றுநர் அந்தோணி டான்னுடன் இணைந்து 9 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக ஈர்த்துள்ளார் டான் ஹூய் லிங்.

மேற்கூறப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆசியாவின் சக்திவாய்ந்த 25 வணிகப் பெண்மணிகளில் ஒருவராக போர்ப்ஸ் சஞ்சிகையால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் டான் ஹூய் லிங்.