தஞ்சோங் மாலிம் – “மரபு கவிதையே தமிழ் இலக்கியத்தின் வேர்” என்ற கருப்பொருளுடன் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியின் பிரமாண்டமான பரிசளிப்பு விழா வருகின்ற 05 அக்டோபர் 2019 மாலை 3.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறுகிறது.
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மைய அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இம்மரபு கவிதைப் போட்டியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மலேசியக் கவிஞர்கள் பங்குபெற்றுச் சிறப்பித்தனர். தொடர்ந்து, மலேசிய இலக்கியத் துறையில் சாதனை படைத்தவருக்கு இலக்கிய விருதும் வழங்கப்பட உள்ளது. எனவே,பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும், மலேசியக் கவிஞர்களையும் அழைத்து வெற்றிக்கு ஒரு விழாவாக மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அனைவரையும் வரவேற்கிறார்கள்.
“ஒற்றைக் கைதட்டினால் ஓசை பெருகிடுமோ தோழர்களே, திரளாக வந்து தமிழனின் வெற்றிக்குக் கைதட்டுங்கள்” என ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.