Home நாடு நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி – உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்துகிறது!

நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி – உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்துகிறது!

118
0
SHARE
Ad

மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்!

சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி ஏழாம் முறையாக நடத்தப்படவுள்ளது.

மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய நாட்டில் தமிழ்மொழி செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் புனைபெயரான நல்லார்க்கினியன் பெயரில் இப்போட்டி நடத்தப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

மாணவர் பிரிவு: (வயது வரம்பு: 16 முதல் 25 வரை). இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு (மானம்)

இளையோர் பிரிவு: வயது வரம்பு: 26 முதல் 40 வரை). இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு (தானம்)

பொதுப் பிரிவு: வயது வரம்பு: 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்). இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு (ஊனம்)

இப்போட்டிக்கான படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் நீட்டிக்கப்பட்டு 12.03.2025 மாற்றம் கட்டுள்ளது.

போட்டியின் விதிமுறைகளைhttps://drive.google.com/file/d/1i7O0Owx7u9tAbiPI5U0RBkqigL5_Pm1T/view?usp=drivesdk என்ற அகப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மரபு கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:

marabukavithai2024@gmail.com 

மேல் விபரங்க்ளுக்கு:

கீதர்சன் சுந்தரேசன் (016-8970704) (இயக்குநர்)
தமிழ் அமுதன் (011-57562015) (துணை இயக்குநர்)