Home One Line P1 மகாதீருக்கு எதிராக அன்வார் நின்றால், அரசியல் ரீதியாக அவர் அகற்றப்படுவார்!”- சைட் ஹுசேன்

மகாதீருக்கு எதிராக அன்வார் நின்றால், அரசியல் ரீதியாக அவர் அகற்றப்படுவார்!”- சைட் ஹுசேன்

649
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு எதிராக நின்றால், அரசியலிருந்து விலகுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவார் என்று பிகேஆர் கட்சியின் இணை நிறுவனர் சைட் ஹுசேன் அலி தெரிவித்தார்.

அவருக்கு இது கடினம் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் அவ்வாறு செய்தால், மகாதீர் அவரை அரசியல் ரீதியாகக் கொன்றுவிடுவார்என்று அவர் கடந்த வியாழக்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிகேஆர் அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக அன்வார் குற்றச்சாட்டப்படுவதற்கு வழிகள் தேடப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

மகாதீர் எதையும் செய்வார் என்பது எங்களுக்கு தெரியும். காணொளி வெளிவந்ததும், உடனடியாக அஸ்மினை வீழ்த்துவதற்கான அரசியல் நடவடிக்கை இது என்று அவர் கூறுகிறார்,” என்று சைட் ஹுசேன் கூறினார்.

அக்காணொளி தொடர்பில் யாரோ ஒருவர் இருப்பதாக காவல் துறையினர் உடனடியாக கூறுகின்றனர். மேலும், அதற்காக நூறாயிரக்கணக்கான ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினர்.”

அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அன்வாரை இதில் சம்பந்தப்படுத்த அவரது வாக்குமூலத்தை அவர்கள் பெற விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

காணொளியின் பின்னால் ஒரு நபராக அன்வார் செயல்பட்டார் என்று கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அன்வார் மகாதீருக்கு பதிலாக பிரதமராக நியமிக்கப்படுவது மிகவும் கடினம். ஆனால் அன்வார் சுத்தமானவர். அதனால்தான் அவர் அந்த வகையில் செயல்படுகிறார். அரசியல் சிக்கலானது மற்றும் அழுக்கானது.” என்று சைட் கூறினார்.