Home One Line P2 வேதியியல் துறையில் பங்காற்றிய மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது!

வேதியியல் துறையில் பங்காற்றிய மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது!

787
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம்கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நோபல் வாரம் இன்று புதன்கிழமை வேதியியல் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடர்ந்தது. 2019-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களின் பட்டியல் அக்டோபர் 7 முதல் 14 வரை அறிவிக்கப்படும். 

2019-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு ஜான் பி. குடெனோஃப், எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு, லித்தியம் அயன் மின்கலன்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று, இயற்பியலில் நோபல் பரிசு வென்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசின் ஒரு பகுதி ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு, இயற்பியல் அண்டவியல் பற்றிய தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல்,  மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோருக்கு சூரிய வகை நட்சத்திரத்தை சுற்றும் எக்ஸோபிளேனட் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நாளை வியாழக்கிழமைஸ்வீடிஷ் அகாடமி, இலக்கியப் பிரிவில் வெற்றியாளரை அறிவிக்க உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரை அக்டோபர் 11-ஆம் தேதி நோர்வே நோபல் குழு அறிவிக்கும். அக்டோபர் 14-ஆம் தேதி ஆல்பிரட் நோபலின் பொருளாதார அறிவியல் பிரிவு வெற்றியாளரின் அறிவிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா(தோராயமாக 940,000 அமெரிக்க டாலர்ஆகும்.