இந்தியாவைப் பிரதிநிதித்து அபிஜித் பானர்ஜிக்கு முன் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோர் நோபல் பரிசினை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்திய– அமெரிக்க பொருளாதார நிபுணரான அவரது மனைவி எஸ்தர் டப்லோ சேலையில் நேர்த்தியாக இருந்ததும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றது.
கடந்த 1913-இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ரவீந்திரநாத் தாகூர் பெற்றார். ஆயினும், அவரால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. 1998-இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை அமர்த்தியா சென் வென்றார். இந்தியாவின் அண்டை நாடான வங்களாதேசத்தைச் சேர்ந்த மற்றொரு வங்காளியான முகமட் யூனுஸ் 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.