Home One Line P1 ஜேபிஜே நெகிரி செம்பிலான்: 82 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்படும்!

ஜேபிஜே நெகிரி செம்பிலான்: 82 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்படும்!

712
0
SHARE
Ad

சிரம்பான்: நெகிரி செம்பிலான் சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே), இரண்டாவது முறையாக கைப்பற்றப்பட்ட வாகனங்களை பொது ஏலத்திற்கு விட உள்ளதாக தெரிவித்துள்ளது.   இங்குள்ள ஜாலான் சிரம்பான் தம்பினில் உள்ள பொது வாகன நிறுத்துமிடத்தில் அக்டோபர் 16-ஆம் தேதி இது நடத்தப்பட இருக்கிறது.

அன்றைய தினம் மொத்தமாக 82 வாகனங்கள் ஏலம் விடப்படும் என்று நெகிரி செம்பிலான் ஜேபிஜே தெரிவித்துள்ளது.

ஏல விற்பனை ஆவணங்களை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 11 வரை 100 ரிங்கிட்டுக்கு, பிளாக் ஒமேகா, ஜெபிஜே நெகிரி செம்பிலானில், 39-வது முகப்பிடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

ஏல விற்பனை ஆவணங்களை வைத்திருக்கும் ஏலதாரர்கள் மட்டுமே அக்டோபர் 7 முதல் 11 வரை நெகிரி செம்பிலானில் வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்” என்று ஜேபிஜே நெகிரி செம்பிலான் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்பதற்கு முன் ஏலதாரர்கள் வாகனங்களை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது ஏல புத்தகத்தில் உள்ளபடி ஏல அமர்வின் போது, பொது ஏல விற்பனை வழிமுறைகளுக்கு ஏலதாரர்கள் இணங்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.