கோலாலம்பூர்: மின் சிகரெட்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு, கடுமையான விற்பனை விதிகள் அல்லது தடைகளை அறிமுகப்படுத்திவதை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாக அதன் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.
மின் சிகரெட்டுகளின் பயன்பாடு பள்ளி மாணவர்களிடையே கட்டுப்பாட்டை மீறி காணப்படுவதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பூன் சாய் கூறினார்.
“நான் தலைமை ஏற்கும் சிறப்புக் குழு மூலம் நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. மேலும், முறையான தகவல்கள் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும்” என்று அவர் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
தேவையான தரவுகள் சேகரிப்பைப் பொறுத்து இந்த விவகாரம் தொடர்பான முடிவு அடுத்த ஆண்டு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.