Home One Line P1 “தடுப்புக் காவலில் சித்திரவதை பிரச்சனையை தடுக்க இயலாவிட்டால் மொகிதின் பதவி விலக வேண்டும்!”- சுவாராம்

“தடுப்புக் காவலில் சித்திரவதை பிரச்சனையை தடுக்க இயலாவிட்டால் மொகிதின் பதவி விலக வேண்டும்!”- சுவாராம்

868
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சித்திரவதை பிரச்சனையை தீர்க்க முடியாவிட்டால் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் பதவி விலக வேண்டும் என்று மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனம் சுவாராம் கூறியுள்ளது.

சுவாராம் நிருவாக இயக்குனர் சிவன் துரைசாமி கூறுகையில், கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக கைதிகளை தொடர்ந்து கொடுமைப் படுத்தி வரும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். நீண்ட காலமாக நடந்து வருகிறது. புதிய மலேசியா சகாப்தத்தில் இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடைபெறுவது வருந்தத்தக்கது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சுவாராம் அழைப்பு விடுக்கிறது. இது உண்மையானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

#TamilSchoolmychoice

மொகிதின் யாசினின் அதிகாரத்தின் கீழ், இவ்வளவு காலமாக மோசமடைந்து வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்று சிவன் நேற்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா மற்றும் தடுப்புக்காவல் சட்டத்தை எந்தவொரு காரணமுமின்றி இரத்து செய்யுமாறு சிவன் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், நேற்று பி.சுப்ரமணியம், காவல் துறையினரால் தாம் சித்திரவதைக்கு ஆளானதாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் செயல்படாத தமிழீழ விடுதலைப் புலியுடன் உறவு வைத்திருப்பதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சொஸ்மாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கும் நேற்று பிணை வழங்க மறுக்கப்பட்டது.

இதற்கிடையில், “பாதுகாப்பு குற்றம்என்ற பரந்த வரையறையைக் கொண்ட சொஸ்மாவை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பான யூமன் ரைட்ஸ் வாட்ச் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.