Home One Line P1 வேதமூர்த்தியின் தீபாவளி ஒற்றுமை ஒன்று கூடல் உபசரிப்பு – ஆயிரத்திற்கும் மேலானோர் திரண்டனர்

வேதமூர்த்தியின் தீபாவளி ஒற்றுமை ஒன்று கூடல் உபசரிப்பு – ஆயிரத்திற்கும் மேலானோர் திரண்டனர்

688
0
SHARE
Ad

சிரம்பான் – தீபாவளியை முன்னிட்டு, அன்றைய தினம் அமைச்சர் வேதமூர்த்தி, பிரதமர் துறை சார்பில் சிரம்பானில் ஏற்பாடு செய்திருந்த ட தீபாவளி ஒற்றுமை ஒன்றுகூடல் – விருந்துபசரிப்பில், பல இனங்களையும் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மலேசிய மக்கள் இனம், மொழி, சமயம், பண்பாடு உள்ளிட்ட கூறுகளைக் கடந்து காலம் காலமாக நிலைநாட்டிவரும் ஒருமைப்பாட்டு உணர்வும் ஒற்றுமைப் பண்பும் இந்த நிகழ்ச்சியிலும் வெளிப்பட்டது.

சிரம்பான் நகராண்மைக் கழக மண்டபத்தில் ஒற்றுமைத் துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த ஒருமைப்பாட்டு ஒன்று கூடல் நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு தங்களின் அன்பையும் பாரம்பரிய பண்பாட்டையும் ஒருவருக்கு ஒருவர் புலப்படுத்தினர்.

அரசாங்க பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தம்பதியர் அனைவரையும் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

#TamilSchoolmychoice

ரெம்பாவ் விவேகானந்தர் இல்லம், ஸ்ரீ இராகவேந்திரர் சமூக நல இயக்கம், வினாஷினி சமூக நல இயக்கம் ஆகிய இல்லங்களைச் சேர்ந்தவர்கள், மூத்த குடிமக்கள், பேறு குறைந்தோர், ஆதரவற்றோர், பூர்வகுடி மக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், உள்ளூர் கலைஞர்கள் படைத்த ஆடல் – பாடல் நிகழ்ச்சி, ஒன்றுகூடலில் கலந்து கொண்டோரை பரவசப்படுத்தியது.